இயக்குநர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா தேசிய விருது!


ஒவ்வொரு வருடமும்,  புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம், இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் ஐவருக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 18 வருடங்களாக நடந்து வரும் இந்த விருது விழா சார்பில்,  இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு விருது வழங்குகிறது.

இவ்விருது விழா நாளை (பிப்ரவரி 3 ஆம் தேதி) இணைய வழியில் நடைபெறுகிறது.கடந்த 18 வது ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு  பெருமை சேர்த்த நபர்களை கவுரவித்து வருகிறது,  இந்த விருது சாதித்த ஆளுமைகளை கவுரவிப்பதற்காகவும்,  இளைஞர்களை ஊக்குவித்து, ஆளுமைகளின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லவும்,  இந்த விருது  ராகுல்வி.காரத் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விருது, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து 25ஆயிரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு விருது பெற்றவர்களை பாரத் அஸ்மிதா விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநாத் மஷேல்கர் – உலகப் புகழ்பெற்ற மூத்த விஞ்ஞானி, டாக்டர் விஜய் பட்கர் – உலகப் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர், டாக்டர் விஸ்வநாத் டி  காரட் ,ஹோல்டர் ஆகியோர் தலைமையில் கவுரவிக்கப்படஉள்ளனர்.இந்த விருது விழா பொது ஊரடங்கு காரணமாக, வரும் 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தப்படவுள்ளது