‘அரண்மனை 4’ ம் பாகம் : விஜய் சேதுபதிக்கு பதில் சுந்தர்.சி.!

சுந்தர்.சி.இயக்கத்தில், கடந்த 2014ஆம் ஆண்டு நகைச்சுவை திகில் படமாக வெளியான ‘அரண்மனை’ பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் 2,3 என அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடிக்கிறார்கள் என செய்தி வெளியானது.

சுந்தர் சி..இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக சுந்தர் சி கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாததால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு,ஏற்கனவே திட்டமிட்டபடி, தொடங்கவுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் சுந்தர் சியே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.