டாம் பாய் லுக்கில் சமந்தா!

மயோசிடிஸ் நோய் தாக்கத்திலிருந்து முழுதும்  விடுபடும் நோக்கில்  நடிகை சமந்தா தற்போது நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் சமந்தா அடிக்கடி இந்தியாவில் உள்ள  கோவில்களுக்கும் சென்று வருகிறார்.நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள குஷி விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது  தனது தோழிகளுடன் பாலி தீவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சமந்தா தனது அழகான நீண்ட  தலைமுடியை வெட்டி குட்டையான கூந்தலுடன் டாம் பாய் லுக்கில் காட்சியளிக்கிறார்.

பாலித்தீவின் . கடற்கரையோரம் பச்சை நிற நீச்சல் உடையில் அவள் புதிய குட்டையான கூந்தலுடன் அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.