நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3: திரையுலக பிரபலங்கள் மகிழ்ச்சி டுவிட்!!
இந்திய விண்கலமான சந்திரயான் -3 (விக்ரம் லேண்டர்) நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளது.உலக அரங்கத்தில் கெத்து காட்டிய இந்த வரலாற்று வெற்றியை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணமான விஞ்ஞானிகளையும் பாராட்டி வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் சந்திராயன் 3 சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில்,, “செயற்கைகோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து செல்வது முதல் நிலவில் இறங்குவது வரை என்ன ஒரு பயணம்.! இஸ்ரோ அணி தேசத்தின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இது. இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் #சந்திராயன் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் தனது பெருமைக்குரிய அடையாளத்தை முத்திரை குத்துகிறது! எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@இஸ்ரோ அணி.நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!! என குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப்பச்சன் , ஷாருக்கான் டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுன்,மகேஷ்பாபு,காஜல் அகர்வால் என பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிம்பு:தனது டுவிட்டரில்,. “நிலவில் சந்திரயான்3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் சரித்திரமாக அமைந்துள்ளது. நட்சத்திரங்கள், சந்திரன் அதற்கும் அப்பால் நாம் அடைய முடியும் என்ற பெருமையும் நம்பிக்கையும் ஒரு சேர கிடைத்த தருணம்” என இஸ்ரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மம்மூட்டி, “இந்த வரலாற்று சாதனையில் பங்கேற்ற இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த மைல்கல்லைக் கொண்டாடுவதில் நான் நாட்டுடன் இணைந்து கொள்கிறேன். எவ்வளவு பெருமையான தருணம்” என தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் தனது டிவிட்டரில், “இறுதியாக தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திராயன் 3 வரலாறு படைத்துள்ளது. இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவை பெருமைப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.