மன்சூர் அலிகான் தயாரித்துள்ள “சரக்கு”!
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு சரக்கு என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், வலினா, பபிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்
.இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். பணியாற்றுகிறார்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று நடக்க உள்ளது.
இப்படம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்,”மக்களை சீரழிக்கும் மதுவுக்கு எதிரான படமாக “சரக்கு” உருவாகி வருகிறது.மதுப்பழக்கத்தால் பல ஏழை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையை நகைச்சுவையாக உரக்க சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.