தணிக்கை துறையில் ‘லஞ்ச’ விவகாரம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்!
விஷால், எஸ்ஜே ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் , ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் உருவான நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மார்க் ஆண்டனியின் இந்தி டப்பிங்கிற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஆடியோ பதிவு ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விஷால்வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவ்வீடியோவில் மேலும், தணிக்கை குழு 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாகவும், சினிமாவில் ஊழல் காட்டப்படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூடாது என்றும் குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வீடியோ குறித்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.விஷாலின் இந்த புகார் குறித்து,மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மும்பைக்கு சென்றுள்ளார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஷால், சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு நன்றி தெரிவித்து,தனது எக்ஸ் தள பதிவில், இந்த ஊழல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நன்றி.
ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி உணர்வைத் தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.