நடிகர் அஜித் தொடங்கிய புதிய தொழில்!
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
இந்நிலையில்,நடிகர் அஜித் தொழிலதிபராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.விதவிதமான அதி நவீன மோட்டார் சைக்கிளில் அடிக்கடி ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித், இந்நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும், “ராஜஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
அனுபவமிக்க நிபுணர்கள் பயணிகளுடன் சென்று கண்கவர் இடங்களைக் சுற்றிக்காட்டியும் மேலும் அவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்குவார்கள். அவர்களின் ஆர்வத்தை அனுபவிக்க பாதுகாப்பான சவாரி. அனைத்து வழித் தடங்களும் குழுவால் சரியாக ஆய்வு செய்யப்படும் என்றும்,.
முதல் சுற்றுப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டிற்கு வருகிற 23 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகச் சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.