விஜய் பேசிய ‘கெட்ட’ வார்த்தை… ‘விஸ்வரூப’ விவகாரமாகிறது!
லியோ படத்தில் இருந்து தணிக்கை குழு வெட்டி தூக்கிய விஷயங்கள் குறித்த தணிக்கை குழு வின் அறிக்கை என நேற்று முதல் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கெட்ட வார்த்தைகள் உள்ள பல காட்சிகளை ம்யூட் செய்துள்ளதாகவும்,. சில கெட்ட வார்த்தைகளை வெட்டி தூக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு ள்ளது மேலும் இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் வாராத அளவிற்கு இப்படத்தில் அதிக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.என்பது உள்ளிட்ட சில விஷயங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தணிக்கை குறித்து வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் பொய் என்றும் அதன் தயாரிப்பளார் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டது இந்நிலையில் ‘லியோ’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடக்கத்தில் ’சீரியல் கில்லர் கண்மூடித்தனமா எல்லோரையும் சுட்றான், ஏற்கனவே நிறைய பேர் ரோட்டில் செத்து கிடக்குறாங்க.. அப்படி இருந்தும் பார்க்கிற எல்லோரையும் சுட்றான், அப்போ ஒரு துணிச்சலான போலீஸ் ஆபீஸர் சிங்கம் மாதிரி வந்து சீரியல் கில்லரை திருப்பி சுட்றான், போலீஸ் ஆபீஸர் துப்பாக்கிய லோடு செய்கிற அந்த கேப்ல அந்த போலீஸ் ஆபீஸரோட துப்பாக்கியை பிடுங்கிட்றான், இப்போ உன் கையில அந்த துப்பாக்கி.. நீ என்ன பண்ணுவ’ என்ற விஜய்யின் வாய்ஸ் ஓவருடன் தொடங்குகிறது.
தொடர்ந்து,‘அவன் இந்த ஊரை ஏமாற்றலாம், உலகத்தை ஏமாற்றலாம், ஆனால் என்னை ஏமாற்ற முடியாது என்ற சஞ்சய் தத்தின் ஆக்ரோஷமான வசனமும் ஒலிக்கிறது அடுத்தாக திரிஷா,அழுகையும் ஆத்திரமுமாக, ” இனிமேல் நாம வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்க போகுதா, ஓடணும், பயந்து பயந்து சாகனும், இப்படித்தான் நம்ம வாழ்க்கையா என வெடிக்கிறார்.
அடுத்த காட்சியில் கவுதம்மேனன், இவனுங்க நிறுத்த போறது இல்ல, ஈசல் கூட்டம் மாதிரி உன்னை தேடி வந்துகிட்டே தான் இருப்பாங்க, நீ இங்கே இருக்க கூடாது, நீ இங்கே இருக்க இருக்க உனக்கு தான் ஆபத்து’ என்ற வசனமும் இடம்பெற்று உள்ளது. மேலும் திரிஷாவிடம் விஜய்,”எவனோ ஒரு தே.. பையன் என்ன மாதிரி இருக்கிறான் என்கிறதுக்காக, என்ன போட்டு உயிரை எடுத்தால், நான் என்னடி பண்ணுவேன் என்று விஜய் பொங்கும் காட்சியும் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளது.
இப்படத்தின் டிரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், விஜய் டிரைலரில் கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளது, அதுவும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடிதான் பாடலிலும் போதை, வன்முறையை குறிக்கும் வரிகள் இடம்பெற்று இருந்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரைலரில் விஜய் பேசியுள்ள சர்ச்சை வசனம் அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.