தீபாவளிக்கு வெளியாகும் ‘டைகர் 3’ !
மனிஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ திரைப்படத்தில் சல்மான்கான் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது.
மேலும் அந்த டிரைலரிலேயே இப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பையும் யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இப்படம்,உலகம் முழுவதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகிறது.