ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் “தி கேர்ள்ஃபிரண்ட்” !
கீதா ஆர்ட்ஸ் தற்போது, மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து “தி கேர்ள்ஃபிரண்ட்” என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.
பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில்,, இளைஞர்களின் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படக்குழு தற்போது படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது,
இப்படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் ராஷ்மிகாவின் . தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் கையாள்கிறார், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்,
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.