நடிகர் சிவகுமாருக்கு கமல்ஹாசன் ‘பிறந்தநாள்’ வாழ்த்து!

மார்க்கண்டேய நடிகர் என திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சிவகுமாரின் நெருங்கிய நண்பர் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் (ட்விட்டர்) சிவகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது, ” அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.