தீவிர சிகிச்சை பிரிவில் விஜயகாந்த்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைத்து செல்லப்பட்டு , அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்து வந்தது.இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவருக்கு இருமல் மற்றும் சளி தொல்லை அதிகரித்து அவதிப்பட்டார்.நேற்று முன் தினம் முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று 3ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இதை தேமுதிக கட்சி அலுவலகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார், வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது. இந்நிலையில்,தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நானும் அந்த மருத்துவ நிர்வாகத்தோடு பேசினேன்.

விஜயகாந்தின் உடல்நலம் சீராக இருக்கிறது. இன்று காலையிலும் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது. ஏற்கெனவே, அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அதுதொடர்புடைய மருத்துவரே, தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இருமல் தொடர்பான பிரச்சினைக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற நிலையில், அந்த தனியார் மருத்துவமனையில் அவரை மிகச் சிறப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.