கீர்த்தி சுரேஷ்- ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான கிரைம் திரில்லர் வெப் தொடர் ‘அக்கா’!
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான ‘ஒய் ஆர் எப் ‘என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் , இரண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து ‘அக்கா’ என்ற வெப் தொடரை உருமாக்கியுள்ளது.இதில் கதையின் நாயகிகளாக இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சுர்வீன் சாவ்லா மற்றும் ஜமீல் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு எபின்கள் ஒருவரை ஒருவர் பழிவாங்க, கொடூரமாக மோதிக்கொள்ளும்… ஒரு பழிவாங்கும் படலமாகவே இந்த தொடர் உருவாகியுள்ளது. கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தத் தொடரை அறிமுக எழுத்தாளரும், இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி இயக்கி உள்ளார்,
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் என்ன பிரச்சனைக்காக மோதி கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அக்கா – தங்கையா என்கிற சந்தேகம் இந்த தொடரின் பெயரை பார்த்தாலே எழுகிறது.இதில் கீர்த்திசுரேஷுடன் மோதும் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.