2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க சமந்தா முடிவு!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா, தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அடுத்த நான்கு வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில்,மயோசிட்டிஸ் என்ற அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு, தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி அந்நோய்க்கு சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் சமூக அக்கறை கொண்ட சமந்தா, ‘பிரதியுஷா’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்..
சமீப காலமாக சமந்தா 2’ம் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில்,நடிகை சமந்தா, இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சமந்தா இரண்டாம் திருமணம் குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.