‘ரஜினி 170 படத்தலைப்பு வெளியானது !
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 170 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இன்றுமாலை இப்படத்திற்கு “வேட்டையன்” என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினியின் அறிமுக டீஸருடன் வெளியாகியுள்ளது.
இந்த டீசரில்,போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடிப்பது போல் “குறி வச்சா இரை விழணும் என ரஜினி கண்ணாடிக்கு கூலர்ஸை மாற்றுவது செம மாஸாக உள்ளது.இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.