‘கங்குவா’ சூர்யா படக்காட்சிகள் நிறைவு!
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக நட்டியும் (நடராஜ்) நடிக்கின்றனர்.
உலகளவில் 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் , சென்னையில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில், இப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக சூர்யா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து சூர்யா கூறியுள்ளதாவது,” கங்குவா திரைப்படத்தில் என் கடைசி காட்சியை நடித்து முடித்துள்ளேன். படப்பிடிப்பு தளமெங்கும் நேர்மறையான சிந்தனை பரவியிருந்தது. படபிடிப்பின் முடிவு பலவற்றின் தொடக்கமாகும். அழகிய நினைவுகளை தந்த இயக்குநர் சிவாவிற்கும் அவரது குழுவிற்கும் நன்றி. கங்குவா தனிச்சிறப்பு மிக்கது. வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது.ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.