தனுஷ் மகன்களுடன் கொண்டாடிய பொங்கல்!

  கடந்த தீபாவளியை தனுஷின் மகன்கள்  யாத்ரா, லிங்கா ஆகியோர் அம்மா ஐஸ்வர்யா மற்றும் தாத்தா ரஜினியுடன் கொண்டாடிய நிலையில் பொங்கல் விழாவை அப்பா தனுஷ் மற்றும் தாத்தா கஸ்தூரிராஜாவுடன் கொண்டாடியுள்ளனர்.இது குறித்த புகைப்படத்தை நடிகர் தனுஷ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
 இந்த புகைப்படத்தை  பார்த்த நெட்டிசன்கள் பலரும்,  ஐஸ்வர்யா இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கேப்ட ன் மில்லர் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.