லோகேஷ் கனகராஜுடன் ஸ்ருதிஹாசன் புது கூட்டணி!

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்துடன் கூடிய  புதிய பதிவு ஒன்றில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் எதிரெதிரே  நின்றபடி உள்ளனர்.அதற்கு கேப்ஷனாக, இனிமேல் தெல்லுலு தான் புதிய சொல்லுலு என்ற வார்த்தையும் காணப்படுகிறது.

இதை பார்த்த பலரும்,இது படமா அல்லது  மியூசிக் ஆல்பமா? இதற்கான அர்த்தத்தை  எந்த அகராதியில் போய் தேடுவது என பதிவிட்டு வருகின்றனர்.  அனேகமாக இது ஒரு மியூசிக் ஆல்பமாக இருக்கலாம் என்றும், ஸ்ருதிஹாசன் பாடல் எழுதி, பாடி, நடனம் ஆட இருக்கும் இந்த மியூசிக் வீடியோவை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.