பொது மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்க ! தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு இன்று சென்னையில் நடந்தது. இதில் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்திற்காக காணொலியில் தோன்றி தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அக்காணொளியில் விஜய் கூறியுள்ளதாவது,”பொதுமக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இடையூறுகள் மற்றும் விமர்சனங்கள் வந்தால் அதனை கண்டுகொள்ளாமல் இன்முகத்துடன் கடந்து செல்ல வேண்டும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி பணி தீவிரமடையும். குக்கிராமங்களில்கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். 80 வயதில் இருப்பவர்களுக்கும் நமது கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்