தேவா பாடிய ‘மாமா குட்டிமா’!
தனியிசை பாடல்கள் மற்றும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய “மாமாகுட்டிமா”என்ற ஆல்பம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இப்பாடலுக்கு தேசிய விருது இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப் பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். ராப் பிரசாத் இயக்கியுள்ள இந்த அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் வெளியிட்டுள்ளார் இப்பாடல் ஆல்பத்தை லண்டனைச் சேர்ந்த மாலா குமார் தயாரித்துள்ளார் .
இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறும்போது.
காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது.மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின்தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கெசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார் இது நான் பெற்ற பாக்கியம்.மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம் இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று கூறினார்.