ரூ.30 கோடி பட்ஜெட்டில் கமலின் பாடல் காட்சி!

 

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகி வந்த இந்தியன்-2 படத்தின் காட்சிகள் நீளம் கருதி தற்போது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு, இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாக உள்ளது..

இந்தியன் 3 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சி ஒன்று கடந்து சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதில் சித்தார்த் மற்சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ள பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட உள்ளது. இந்த பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது