செயற்கை நுண்ணறிவு கருவிக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை சொல்லும், ‘இரவின் கண்கள்’ !
செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும், மனிதனுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லும் வகையில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள திரில்லர் படம் ” இரவின் கண்கள்”.. ‘எம்.கே.என்டர்டெயின்மெண்ட்’ பிரதாப் தயாரித்துள்ள இப்படத்தில்
‘பாப்’ சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.’ டாலி’ ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை கீதா கரண் கவனிக்க, சார்லஸ் தனா இசையமைத்து வருகிறார்.
படம் பற்றி இயக்குனர் பாப் சுரேஷ் பேசியதாவது…”இந்த கதை ஐ.டி யில் ல் பணிபுரியும் விக்டர் என்பவனுக்கும், அவன் வைத்திருக்கும் ‘ஐரிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் உள்ள நட்பை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
விக்டர் கல்யாணம் ஆனவன். பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் வைத்திருக்கும் ‘ஐரிஸ்’ எனும் கருவி ஒரு விபத்திற்கு பின் வித்தியாசமாக நடந்து கொள்கிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் அதை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் விக்டர் எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் கொலைக் குற்றவாளியாகிறான். அந்த கொலை குற்றத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் முழிக்கும் விக்டருக்கு அவனது நண்பன் (ஐரிஸ் ) , அந்தக் கொலையை மறைக்க வழிகாட்டுகிறது என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் சொல்லிருருக்கிறோம்.
ஆனால் விக்டர் தொடர்ந்து மேலும் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.ஐரிஸ் அவனை காப்பாற்றியதா, இல்லையா என்பதே மீதிக்கதை.ரசிகர்களுக்கு ஒவ்வொரு காட்சிகளும் புதுவிதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்கிறார் இயக்குனர் பாப் சுரேஷ்.