அண்ணாமலை குப்புசாமிக்கு அடிமேல் அடி ! ம. நீ. மய்ய மவுரியா கண்டனம் .!

ம நீ மய்யத் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் பேசுகையில் “மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நாக்பூர் தான் தலைநகராகிவிடும் “என்கிற  உண்மை நிலையை சொன்னார். 

அங்குதான் ஆர் எஸ் எஸ் தலைமை நிலையம் இருக்கிறது. இங்கிருந்துதான் ஒன்றிய அரசு இயக்கப் படுகிறது என்பது அரசியல் வாதிகளுக்கு புரியும். புதுடில்லி தலைநகரம் என்பது உண்மை . இந்த உண்மை உடைக்கப்பட்டு நாக்பூர் தலைநகராகி விட்டால் என்ன செய்வது  என்கிற அச்சத்தை கமல்ஹாசன் வெளிப்படுத்தியிருந்தார் .

இந்த உண்மை அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது அண்ணாமலைக்கு..உலகநாயகன் கமலை மன நோயாளி என்பதாக சாடி விட்டார் . 

இதனால் ம நீ மய்யத் தலைவர்கள் ,தொண்டர்கள் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள் 

ம. நீ . மய்யத் துணைத் தலைவர் ஏ ஜி மவுரியா ( முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ) தன்னுடைய கண்டனத்தை கண்ணியமுடன் பதிவு செய்து இருக்கிறார்.

“தமது மாநில தலைவர் பதவி பறிபோய் விடுமோ? நோட்டாவை  தாண்ட முடியுமா? மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிரச்சாரம் நம் கூடாரத்தை காலி செய்து விடுமோ ! தனிமையின் விரக்தி, என பல முனை தாக்கங்களின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார் அண்ணாமலை நாவடக்கம் தேவை” !

சரியான அடி. !