ராம்சரனுக்கு கவுரவ டாக்டர்பட்டம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ராம்சரனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், வரும் 13-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற் இருக்கும் நடிகர் ராம்சரணின் கலைத்திறமையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் ராம்சரண் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.நடிகர் ராம்சரண்,ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.