*’ராக்கிங் ஸ்டார்’ யாஷின் தயாரிப்பில் உருவாகும் ராமாயணம்!


‘பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்’  நிறுவனமும்,  கேஜிஎப் நாயகன் யாஷின் ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன்  சர்வதேச பார்வையாளர்களுக்காக உருவாக்குகிறது. இது குறித்து இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ள நடிகர்  யாஷ் கூறுகையில் , ” இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதை நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன். இந்நிறுவனத்தின் பின்னணியில் இருந்த சக இந்தியரான நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.  இந்த விவாதங்களில்   ராமாயணமும் இடம்பெற்றது.  ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது.ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம். நித்தேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.என்கிறார்.