சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படம் ஏற்கனவே 53-வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வானது. பின்னர் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் ரூமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் தனித்துவமான காட்சி அமைப்பினால், அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் தேர்வாகியுள்ளது.