‘கருடன்’ பட இயக்குனருடன் இணைந்த ‘லெஜண்ட்’ சரவணன்!


தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன் அருள். இப்படத்தை தொடர்ந்து ‘லெஜண்ட்’ சரவணன் ‘கருடன்’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்படத்தின் புகைப்படங்களை இயக்குனர் துரை செந்தில் குமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் பக்கா மாஸ் கமர்ச்சியால் ஆக்சன் படமாக உருவாகவுள்ள  இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது.