விக்னேஷ் சிவனின் ‘எல்ஐசி’ பெயர் மாறுகிறதா?.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ‘எல்ஐசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்பட பலர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டிலும் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதைப்பார்த்த ரசிகர்கள்,ஏற்கனவே இப்படத்துக்கு எல்ஐசி என் பெயரிடப்பட்டுள்ள நிலையில்,இப்படத்தின் எல் ஐ சி தலைப்பு மாற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்