சமுத்திரக்கனியின் ‘ராமம்ராகவம்’, தமிழ் ,தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது!
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ராமம்ராகவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும் தன்ராஜ் மகனாகவும் நடித்துள்ளனர். அப்பா மகன் உறவை சொல்லும் படமாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ராமம்ராகவம்’ படத்தின் ‘கொல சாமி போல’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தை சமீபத்தில் பார்த்த தெலுங்கு திரையுலகை சேர்ந்த சில பிரபலங்கள் சமுத்திரக்கனியையும் இயக்குனர் தன்ராஜையும் வெகுவாக பாராட்டி,. சமூகத்திற்கு அவசியமான அதே சமயம் கலகலப்பான குடும்ப காவியம் என புகழ்ந்து தள்ளியுள்ளனராம் இந்த படத்தின் கதையை சிவபிரசாத் யானலா எழுதியிருக்கிறார்.
விரைவில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக இருக்கிறது.