‘கார்த்தி 29’ புதிய பட அறிவிப்பு வெளியானது !
தென்னிந்திய திரையுலகில் மாறுபட்ட களத்தில், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் அவரது 29 வது படத்தை தயாரிக்கிறது .முன்னதாக கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற கிளாசிக் பிளாக்பஸ்டர் படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற படங்களை தயாரித்து இருந்தது இந்நிலையில் ‘கார்த்தி 29’ , பீரியாடிக் திரைப்படமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.இந்த #Karthi29 பிரம்மாண்ட திரைப்படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ‘ஐவிஓய்’ ( IVY ) என்டர்டெயின்மென்ட் மற்றும் ’பி ஃபோர் யு’ ( B4U ) மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
#Karthi29 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தற்போது தொடங்கிவிட்டனர். #Karthi29 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.