நடிக்க வரும் போதே எம்ஜி யா ராகி விட துடிக்கிறார்கள்! – கே ராஜன் கடும் தாக்கு

‘கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ்’ கோவை பால சுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள புதிய படம், “தில் ராஜா”.. இப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 27 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் என் பிள்ளைகளில் ஒருவன், இன்னும் அவர் பெரிய ஆளாக வருவார். நாயகி ரெண்டு பேர் வரவில்லை, என்கிறார்கள் . பேக்கப் பண்ணிய ஹீரோயினை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள், இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இதோ அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை வந்திருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள். என் நண்பன் திருமலை மனக்கஷ்டத்தில் எல்லாவற்றையும் கொட்டி விட்டார். ஒரு தயாரிப்பாளருக்கு நன்றி மறந்தவனை நடிக்க வைக்காதீர்கள். இந்தப்படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட டிரைலரே மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா ஒரு ஆணழகன், தமிழ்மகன் நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்போது வரும் நடிகர்களுக்கு வரும் போதே எம் ஜி ஆர் ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது. இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது…