மும்பையில் குடியேறியது ஏன்? மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்,பன்முக கலைஞரான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது ரஜினியுடன் கூலிப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது இது தான்,”கமல் ஹாசன் மற்றும் சரிகா போன்ற பெற்றோர்கள் இருப்பது எனக்கு பெருமை தான். ஆனால், என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது.பலரும் என்னை கமலின் மகள் என்று தான் குறிப்பிட்டார்கள் இருப்பினும் எனக்கென்று ஒரு சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைப்பேன்.அதன் காரணமாகவே என் அப்பா, அம்மா பிரிந்த பின் மும்பையில் குடியேறினேன் . என் தந்தையும், தாயும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அது என்னையும் என் தங்கையும் மிகவும் பாதித்தது” என்று கூறியுள்ளார்