‘விடுதலை 2’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்! சர்ச்சை காட்சிகளை வெட்டி தூக்கிய அதிகாரிகள்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர்,பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள  ‘விடுதலை 2’ வரும்  டிசம்பர் 20ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள  இப்படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி உள்ளது. விடுதலை 2 படத்திற்கு  ‘ஏ’ சான்றிதழை   பெற்றுள்ள இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஆகும். இதில் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களத்தில் இருந்து உருவாக்கிக்கணும். என இடம் பெறும்  வசனம்  திருத்தம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெயரை வைத்து காட்சிகள் வந்துள்ளது. அதனை அகற்றவேண்டும் அல்லது மாற்றவேண்டும் என கூறியுள்ளது. அதைப்போல, சமூகத்தை வைத்து பேசும் ஒரு வசனத்தையும் படத்தில் இருந்து சென்சார் குழு வெட்டி தூக்கியுள்ளது. அது மட்டுமின்றி,  உண்மையான அரசியல் அமைப்புகளைப் பற்றிய குறிப்புகளை, திரைப்படத்தில் எங்கு காட்டினாலும் அதை மாற்றவும் படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.’அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை’ உள்ளிட்ட வார்த்தைகளை மாற்றியிருக்கிறது. ‘பிரச்னையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்டக் களங்களிலிருந்து உருவாக்கிக்கணும்’ என்ற வசனம் மாற்றப்பட்டு, அதில் ‘அந்த ஆயுதம் ஓட்டாகக் கூட இருக்கலாம்’ என்று சேர்க்கப்பட்டிருக்கிறது.மேலும் இப்படத்தில் பல கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக மியூட் செய்து ஒளிபரப்ப தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமின்றி, சில காட்சிகளையும் தணிக்கை  குழு படத்திலிருந்து தூக்கியுள்ளது என்கிறார்கள்.