பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக உருவான ‘பயர்’ !

திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம்,’ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிகே இசையமைத்துள்ள இப்படத்துக்கு சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்,இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.முரளி ராமசாமி, டி.சிவா, பாண்டியராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இப்படம் குறித்து  ஜேஎஸ்கே கூறும்போது, “இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் நான் எழுதிய கதை தான் இது. நான்கு பெண்களைப் பற்றிய கதைதான் படம். நான்கு கதாநாயகிகள் நடித்துள்ள இப்படத்தை  பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். எஸ்.கே.ஜீவா சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக  நடித்திருக்கிறேன்.திரைக்கு வருவதற்கு முன்பு, இப்படத்தை முதலில் பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனித்தனியாகத் திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். அனைவரும் சிறந்த விமர்சனம் கொடுத்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது ” இவ்வாறு அவர் கூறினார்.