உ.பி. கும்பமேளாவில் கடவுளை கண்ட சஞ்சிதா ஷெட்டி!
உ.பி. மாநிலத்தில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில், பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி,உ.பி.கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார் , இது குறித்து சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளதாவது,””நான் சிறுவயதில் பலமுறை திரிவேணி சங்கமத்திற்கு போயிருக்கிறேன். 90களில் நான் சிறுமியாக இருந்தபோது கும்ப மேளாவுக்கு சென்றது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் இரண்டு வாரங்கள் கும்பமேளா நிகழ்ச்சிகளில் தான் இருந்தேன். மேலும் எனது ஆன்மிக குரு மற்றும் 500 சீடர்களுடன் முகாமில் தங்கி இருந்தேன். அது முற்றிலும் தெய்வீகமானது. நாங்கள் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு எழுந்து 1/2 மணி நேரம் வரை நீராடி, பின்னர் தியானத்தில் இருப்போம் .என் குழந்தைக்கால நண்பர்களில் பலரை அங்கு சந்தித்தேன். குறிப்பாக, ஜனவரி 29ஆம் தேதி மௌனி அமாவாசை தினத்தன்று அதிகாலை 2.30 மணிக்கு திரிவேணி சங்கமத்தில் நீராடினேன். அப்போது என் அருகில் கடவுள் இருந்ததைப் போல உணர்வு இருந்தது” என கூறியுள்ளார்.