விமல்- யோகிபாபு கூட்டணியில் உருவான கரம் மசாலா!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக உருவாகியுள்ள புதிய படம்,கரம் மசாலா. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க , சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார் இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாரணமாக வீடு , திருமணம்,தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது…அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடி படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். என்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இப்படத்தின் ஒளிப்பதிவை கே. கோகுல் கவனிக்க, பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார்