‘கஜானா’ திரைப்பட இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கே.எம்.ரியாஷ் படத்தொகுப்பு செய்ய, சீனிவாசன் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கபிலன் அம்ற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘கஜானா’ வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் மதிழயகண், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் இனிகோ பேசுகையில், “டிவியில் அட்வெஞ்சர் ஷோ ஒன்று பண்ணியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்த படத்தின் இயக்குநர் சாம் அதிகம் பேச மாட்டார், ஆனால் படத்தில் நிறைய பேசியிருக்கிறார். மிகப்பெரிய முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். நடிகை வேதிகா இந்த படத்தில் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். சாந்தினி நடித்திருக்கும் வேடத்தில், அவரை தவிர யாராலும் நடித்திருக்க முடியாது, அந்த அளவுக்கு செய்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அச்சு சார் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் படம் பார்க்கும் போது அவர் பெரிய இடம் என்பது புரிந்தது. அந்த அளவுக்கு பின்னணி இசையை பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார். நான் எந்த படத்தை பற்றியும் இவ்வளவு பேசியது இல்லை, இந்த படம் குறித்து பேசுகிறேன் என்றால், அந்த அளவுக்கு படம் வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் படம் ஓடிக்கிட்டே இருக்கும், படத்தில் விலங்குகள் அதிகம் வருவதால் இது குழந்தைகளுக்கான படமாக மட்டும் இருக்காது, பெரியவர்களுக்கும் பிடிக்கும், அவர்களுக்கு ஏற்ற அட்வெஞ்சர் காட்சிகள் இருக்கிறது. மக்கள் இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் இது பற்றிக்கொள்ளும். அதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக கஜானா அமையும், நன்றி.” என்றார்.

நடிகை வேதிகா பேசுகையில், “கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் சாரை பாராட்டுகிறேன், இப்படி ஒரு தைரியமான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.