பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”!

ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம்  தயாரித்துள்ள புதிய படம், “ஆனந்த வாழ்க்கை”..இப்படத்தில், இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் கதைநாயகனாக நடிக்க, இவருடன் மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலாய் சேர்ந்தவர்களும்  நடித்துள்ளனர். இப்படத்தை   ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார்.” அந்த ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும்         கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .
 அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப்  பயிற்சிகளை கற்று,  அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை  உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இப்படத்தின் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது .சத்யா.சி  .  இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.கோகுல்,ஒளிப்பதிவு செய்துள்ளார்