‘டேட்டிங்’ மோசடி: அம்பலப்படுத்த வரும்,’நீ’ பார்எவர் !

ஜென் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்,புகழ்,ஈடன் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘நீ’ பார்எவர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன்,நிழல்கள் ரவி,எம். ஜெ. ஸ்ரீராம், ரீதிகா சீனிவாஸ்,செல்லா,பிருந்தா,டாக்டர் வித்யா,பிரதோஷ்  சினேகா சக்தி, உள்பட பலர் நடித்துள்ளனர் இப்படத்தை அசோக்குமார் கலைவாணி எழுதி இயக்கியுள்ளனர் இப்படத்தின் ஒளிப்பதிவை ராஜா பட்டாசார்ஜி கவனிக்க, அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார் இப்படம் குறித்து இயக்குனர் அசோக் குமார் கலைவாணி  கூறுகையில்,”இப்படம் இன்றைய இணைய உலகில் பேசு பொருளாக இருக்கும் ‘டேட்டிங்’ செயலியின் மோசடியை பற்றிய படமாக உருவாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறை அடையாளமே இன்ஸ்டாகிராமை தான் உள்ளது அந்த வகையில். டேட்டிங் செயலியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதன் முதல் பகுதி நண்பர்களுக்குள்  நடக்கிற கதையாக ஜாலியாக இருக்கும்.  ஒருவர் நமக்கு ‘கிப்ட்’ கொடுக்கும் போது ஏற்படுகிற சந்தோஷம் மாதிரி, ‘ஜிகினா’ பூசிய ஒரு விஷயமாக இருக்கும். செகண்ட் ஆப் , ஒருத்தர் நமக்கு ‘கிப்ட்’ கொடுத்துட்டு, அட்வைஸ் பண்ணா எப்படி இருக்கும், அதுதான் செகண்ட் ஆப்.  டேட்டிங் செயலி இன்றைய இளைஞர்களிடையே பயன்பாட்டுக்கு வந்ததற்கு பின்பு ,ஆண், பெண் உறவின் கண்ணோட்டமே மாறி உள்ளது. ஒரு பெண்ணை பார்த்து, ஒரு வருஷமா அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து, பின்னாடி போய் சுற்றி, ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல, அது சிலருக்கு ஓகே ஆனாலும், சிலருக்கு காவல் நிலையம் வரை செல்லும் சிக்கலையும் ஏற்படுத்திவிடும் என்பது நிஜம். ஆனாலும் அந்த காதலில்  ஒரு உண்மை இருந்தது.  ஆனால் தற்போது ‘டேட்டிங்’ ஆப் பில் ர் நிறைய மோசடிகள் நடக்கிறது 99 சதவீதம் அது மோசடி மற்றும் ஏமாற்று வேலையாகவே உள்ளது.  பெண் பெயரில் ஆண்களை  ஏமாற்றுவதும்  சகஜமாக நடக்கிறது.  இதை வெளியிலும் சொல்ல முடியாது. சட்டப்படியும் அணுக முடியாது. காரணம் இது அங்கீகரிக்கப்படாத செயலியாகவே உள்ளது. இந்த செயலியில் உள்ள ஒருவரைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே பொய்யாகவே இருக்கும் . இது குறித்த விழிப்புணர்வை சொல்லும் வகையிலும் இந்த மோசடி வலையில் இன்றைய தலைமுறை இனிமேலும் வீழ்ந்து விடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே இப்படம் உருவாகி உள்ளது. என்கிறார்.