“தனுஷ் 55” படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது
‘இட்லி கடை’. “தேரே இஸ்க் மெய்ன்” ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் தனுஷ் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.இந்நிலையில்,அடுத்ததாக தனுஷ், அமரன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்துள்ளார் இப்படம் தனுஷின் 55வது படமாக உருவாகிறது. இப்படத்தை ஆர் டேக் ஸ்டுடியோஸ் மற்றும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பிரம்மாண்டமான படத்தை தயாரிப்பதில் மிகுந்த பெருமையும் மரியாதையும் அடைகிறோம் அளவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தின் மூலம் வலுவான படைப்புக் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்துள்ளோம். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. மேலும், தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது., தொழில்நுட்ப குழு மற்றும் படப்பிடிப்பு தொடர்பான முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.