வதந்திகளுக்கு மத்தியில் மகன்களுடன் ‘திருப்பதி’யில் தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் தனுஷ். ‘இட்லி கடை’. மற்றும் “தேரே இஸ்க் மெய்ன்\” ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘போர்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாக்கி வரும் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தபடத்தை தொடர்ந்து ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இதற்கிடையே பாலிவுட் நடிகை மிர்னாள் தாகூரை, தனுஷ் காதலித்து வருவதாகவும் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தனது பரபரப்பான சினிமா பணிகளுக்கு இடையே தனது மகன்களுடன் நேரம் செலவிட்டு வருவது அவரது பண்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.