தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் தேர்வு!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ் குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ஜிகேஎம். தமிழ்க்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.
தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், 2026-29-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு .நடந்தது.இந்தத் தேர்தலில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் உட்பட மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர். இதில், ராம நாராயணன் அணி சார்பில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமியும், அவரை எதிர்த்து, நலம் காக்கும் அணி சார்பில் ஜிகேஎம். தமிழ்க்குமரனும் போட்டியிட்டனர். முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர், வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 788 வாக்குகள் பெற்ற தமிழ்க்குமரன், 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சுஜாதா விஜயகுமார், பொருளாளர் பதவிக்கு போட்டியிட் ட சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 1 .தேனப்பன் – 698. 2. அழகன் தமிழ்மணி – 684, 3. பைஜாடாம் – 674, 4. சித்ரா லட்சுமணன் – 639, 5. ஏழுமலை – 633, 6. தாய் சரவணன் – 606, 7. முருகன் – 605, 8. மகேந்திரன் – 600, 9.ஞானவேல் – 58,0 10. இசக்கிராஜா – 574, 11. மாதேஷ் – 569, 12. தன சண்முகமணி – 556, 13. டேவிட்ராஜ் – 527, 14. சாலை சகாதேவன் – 527, 15. H. முரளி – 526, 16. ஜோதி – 519, 17. கபார் – 496, 18. ரஞ்சித்குமார் – 494, 19. பியாரிலால் – 486, 20. செந்தாமரை கண்ணன் – 479, 21. ராஜராஜன் – 475, 22. பாலாஜி – 467, 23. ஜெயசீலன் – 466,24. முருகன் – 454, 25. அன்பு – 443, 26. பழனிவேல் – 440 ,ஆகியோர்களும் வெற்றி பெற்றுள்ளனர் . புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள ஜி.கே.எம் தமிழ்குமரன் தலைமையிலான குழுவினர் 2029-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.