
பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி, பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து, நேற்று இரவு டெல்லியில் இருந்து, சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கனிமொழி மீண்டும், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது கனிமொழி எம்பி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்
களுக்கு அளித்த பேட்டி;
கேள்வி; டெல்லியில் சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில், திமுக சார்பில் நீங்கள் பங்கேற்றது குறித்து,
சர்ச்சை எழுந்துள்ளதே?
கனிமொழி ; இதில் சர்ச்சை ஆவதற்கு என்ன இருக்கிறது? நாடாளுமன்றத்தில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மாற்றித் தர வேண்டும் என்று, சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், ஏற்கெனவே கேட்டிருந்தோம். அது தொடர்பாக சபாநாயகரிடம் நேரில் பேசுவதற்காகவே, அங்கு சென்றோம்.
கேள்வி: இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், நீங்கள் பங்கேற்றது ஏன்?
கனிமொழி ; நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை.
இந்தியா கூட்டணியில் தற்போது, காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. நாங்கள்
இல்லை. இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.












