மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளில் அவரது ‘பயோபிக்’ (எம்எஸ்- ஏ லெகஸி ஆன் ஸ்கிரீன்) படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் சிவகுமார், கமல்ஹாசன், சமுத்திரகனி மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள ராஷ்மிகா மந்தனா, மேடையில் இசை கலைஞர்களுடன் இணைந்து பாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்தின் தொடக்க விழாவை நடிகர் கமல்ஹாசன் எம்.பி .கிளாப் அடித்து தொடங்கி வைத்து பேசுகையில், “முன்பெல்லாம் தென்னிந்திய படங்களுக்கு ஹப்பாக சென்னை தான் இருந்தது. மீண்டும் அந்த நிலை உருவாக வேண்டும்.
நாமெல்லாம் ஒன்றாக இணைந்து முன்பு போலவே பணியாற்ற வேண்டும். சென்னையில் மட்டுமே அது நடக்க வேண்டும் என சொல்ல மாட்டேன். ஹைதாராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் என எந்த இடமாக இருந்தாலும் ஓகே தான். நாமெல்லாம் திராவிட குடும்பம் என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது.திராவிடக் குடும்பம் என்றதும் அந்த அரசியல் என நினைத்து விட வேண்டாம். இது அரசியல்வாதிகள் பற்றிய திராவிடம் அல்ல இதுகுறித்து மானுடவியலாளர்களிடம் கேளுங்கள் புரியும் என்றார் கமல்ஹாசன். மேலும், ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை. என்னை எல்லாம் எம்.எஸ். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னால் எனக்கு தொடை நடுங்கி விடும்”.என்றும் கலகலப்பாக பேசினார்.
இந்நிகழ்வில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள ராஷ்மிகா மந்தனா, மேடையில் இசை கலைஞர்களுடன் இணைந்து பாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் அல்லு அரவிந்த் இணைந்து தயாரிக்க உள்ளனர். ஜெர்ஸி, கிங்டம் படங்களை இயக்கிய டோலிவுட் இயக்குநர் கவுதம் தின்னனூரி இந்த படத்தை இயக்குகிறார்.












