Friday, April 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தேசிய இயக்குனராக இருக்கணும்னு ஆசை!-இயக்குனர் பிரியதர்சன்.

admin by admin
December 18, 2017
in News
431 4
0
602
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமித்திருக்கிறார்கள்.

இதுவரை நான் 4 படங்கள் தயாரித்திருக்கிறேன். எல்லாமே  மலையாள படங்கள். முதன் முறையாக தமிழில் படம் தயாரித்திருக்கிறேன். அதுவும் 93 படங்கள் இயக்கிய லெஜண்ட் பிரியதர்ஷன் சார் இயக்கும் படம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் இயக்கிய  பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். நிமிர் படமும் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. என்னுடைய கேரியரில் நிமிர் மிக முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். என்னை விட அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், நடிகர்களுடன் வேலை செய்தது என் பாக்கியம் என்றார் நாயகி பார்வதி நாயர்.

You might also like

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

ஒரு நாள் பிரியதர்ஷன் சார் என்னை அழைத்து, அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சொன்னார். இதுவரை அவர் நான் நடித்த எந்த படமும் பார்த்ததில்லை. அதுவும் எனக்கு நல்லது தான். நாம் பெரிய நடிகர்களோடு நடிக்கும் போது அவர்களையே வியந்து பார்த்துக் கொண்டிருப்போம், அந்த மாதிரி இந்த படத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் சாரை வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். தெறி படத்துக்கு பிறகு நிறைய வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனக்கு வந்தன, அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை, பிரியதர்ஷன் சாருக்காக இந்த படத்தை ஒப்புக் கொண்டேன் என சொன்னார் மகேந்திரன் சார். அவருடன் இந்த படத்தில் நான் நடித்தது என் அதிர்ஷ்டம். பிரிவியூவில் படத்தை பார்த்த என் மனைவி, உன் கேரியரில் மனிதன் படத்துக்கு பிறகு அதை விட ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறாய், ஆனாலும் ஃபகத் பாசில் செயததில் பாதியை செய்திருக்கிறாய் என சொன்னார். அவர் கொடுத்த இந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தை பார்த்த பலரும் பிரியதர்ஷன் சாரின் சிறந்த படமாக நிமிர் வந்திருக்கிறது என்றார்கள். ஜனவரி 26 ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த சில வருடங்களாக நான் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட இடைவெளி விட காரணம் இதுவரை ஒரு நல்ல பெயரை பெற்றிருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது. 100 படங்களை தொட, இன்னும் 8 படங்கள் தான் இருக்கு. அதனால் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். நாம் எடுக்கும் படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் படம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிய இயக்குனராக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.

இந்த கதைக்கு சாதாரண ஒரு முகம்  தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. அவரின் சாதாரண பையன் போன்ற தோற்றத்தை வைத்து தான் அவரை தேர்வு செய்தேன். படத்தில் நடிக்க வேண்டாம், கேரக்டராக நடந்து கொள் என உதயநிதியிடம் சொன்னேன். அவர் கேரக்டராகவே மாறி விட்டார். படத்தில் உதயநிதி கதாபாத்திரத்தின் பெயர் நேஷனல் செல்வம். போட்டோகிராபராக, யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வாழும் அந்த கிராமத்து இளைஞன், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் வரை, செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து பழி வாங்குவது தான் படம். ஒரிஜினல் படத்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையை மாற்றி இதில் கொஞ்சம் கமெர்சியலாக பண்ணியிருக்கிறோம். சமுத்திரகனி, எம்எஸ் பாஸ்கர் ரொம்பவே உதவியாக இருந்தார்கள். முழுக்க தென்காசி பின்னணியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளைஞனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும்படி படமாக்கியிருக்கிறோம். கிராமத்தையும், கிராமத்து வாழ்க்கையும் அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். 36 நாட்களில் படத்தை முடித்தோம். அதில் 28 நாட்கள் செருப்பே அணியாமல் நடித்தார் உதயநிதி. மகேந்திரன் சார் டப்பிங் முடித்த பிறகு, ஃபகத் பாசிலை விட உதயநிதி சிறப்பாக செய்திருக்கிறார் என சொன்னார். முள்ளும் மலரும், உதிரி பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே படங்கள் வெளியான காலத்தில் மகேந்திரன் சாரிடம் உதவியாளராக வேலை செய்ய முயற்சி செய்தேன், அது நடக்கவில்லை. இப்போது அவருடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

வைரமுத்து, தாமரை பாடல்கள் எழுதிருக்காங்க, ஆனால் இரண்டு இளைஞர்கள் அஜனீஷ், டர்புகா சிவா தான் இசையமைச்சிருக்காங்க. இளைஞர்களிடம் வேலை செய்யும்போது, நிறைய கேட்டு வாங்க முடியும், நமக்கு தேவையானவற்றை உபயோகித்து கொள்ளலாம். இந்த படத்தில் நிறைய இளைஞர்களோடு வேலை பார்த்தது புது அனுபவமாக இருந்தது. கடந்த 20 வருஷமா தமிழில் கலை படங்களாக எடுக்குறீங்க, கமெர்சியல் படம் ஏன் எடுக்கறதில்லனு கேட்குறாங்க. கடைசியாக இயக்கிய காஞ்சிவரம், சில சமயங்களில் கலை படங்கள். அந்த குறைய தீர்க்க  அமைந்தது தான் நிமிர். ஒளிப்பதிவாளர் வின்செண்ட், இயக்குனர் பாரதிராஜா ஆகியோருக்கு இந்த படத்தை  அர்ப்பணிக்கிறேன் என்றார் இயக்குனர் பிரியதர்ஷன்.

admin

admin

Related Posts

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும்  குற்றம் கடிதல் 2, !
News

ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்க வரும் குற்றம் கடிதல் 2, !

by admin
April 16, 2026
கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026

Recent News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?