கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ரசிகர்களை குடும்பத்தினருடன் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அதோடு அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் அடுத்து என்ன செய்ய இருக்கிறேன் என்பது குறித்தும் அறிவித்தார். அரசியல் குறித்து பேசுகையில்,தமிழ் நாட்டின் சிஸ்டம் கெட்டுப் போய் விட்டது . விரைவில் போர் வரும் விரைவில் சொ ல்கிறேன். அப்போது போருக்கு எல்லோரும் தயாராக இருங்க என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் மாவட்டம் தோறும் உள்ள ரசிகர்களை முறையாக எந்தெந்த தேதிகளில் சந்திக்க இருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதே சமயம் தலைமை ரசிகர் மன்றத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களை சந்திக்கும் பட்டியல் விவரம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.
கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.