இயக்குநர் லிங்குசாமியின் ” லிங்கூ-அய்க்கூ” புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை ரஹ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் – நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
“லிங்கூ – ஹைக்கூ ” நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி கூறியதாவது ,’ தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அணைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஓரு பிடிப்பு உள்ளது.பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்து காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்பொது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியீடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன். இப்பொதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார் இயக்குநர் லிங்குசாமி.