சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரிராஜா ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார் . பதிலுக்கு போத்ரா தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்தும் புகார் கூறியிருந்தார். போத்ரா சில திரையுலக மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்புகாரில் போத்ராவின் மகன்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு நடிகர் ரஜினிகாந்த் , சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற ஐகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தன் மீது அவதூறு புகார் கூறியதாக போத்ரா, ரஜினி மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஜனவரி 25 ம் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.இச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது