சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் அதன் தலைவர் அபிராமிராமநாதன் தலைமையில் இன்று மாலை நடந்தது .இக் கூட்டத்தில் 147 திரை அரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில்,அபிராமி ராமநாதன் கூறியதாவது,” மார்ச் மாதம் 16 முதல் திரையரங்குகளை மூடமாட்டோம். ஸ்ட்ரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழி படமாக இருந்தாலும் பொது மக்களின் பொழுது போக்கிற்காக திரையிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.