Monday, May 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

65-வது தேசிய திரைப்பட விருதுகள்அறிவிப்பு!

admin by admin
April 14, 2018
in News
433 5
0
606
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.இந்த விருதுகள் அறிவிப்பு, இன்று ஏப்ரல் 13-ம் தேதி காலை 11.30மணியளவில்  பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இயக்குநர் சேகர் கபூர் அறிவித்தார். ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’ 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் – நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர் சந்தோஷும், நாட்டியக் கலைஞரான ஷீலாவும், தருண் என்ற சிறுவனும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.டேக் ஆஃப் என்ற மலையாள படத்துக்காக நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குஞ்சு முஹம்மது இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசபூர்வ மன்சூர்’ மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘போயி மறஞ்ச காலம்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கே.ஜே.யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம்தாஸ் குருவாயூர் எழுதிய இந்தப் பாடலுக்கு, ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள யேசுதாஸுக்கு, இது 8-வது விருதாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக ஷாஷா திருப்பதிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஷாஷா, முதன்முதலாகப் பெறும் அரசு விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.காற்று வெளியிடை மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு இசையமைத்தற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5-வது முறையாக தேசிய விருதை ஏ.ஆர்.ரகுமான் பெறுகிறார். இதே போல் பாகுபலி படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. தாதா சாகேப் பால்கே விருது  பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவுக்கு கிடைத்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 65 வது தேசிய திரைப்பட விருதுகள்  முழு விபரம் இதோ,

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

சிறந்த தமிழ் படம்- டூலெட்

சிறந்த இந்தி படம்- நியூட்டன்

சிறந்த தெலுங்கு படம்- காஸி

சிறந்த மலையாளப் படம்- தொண்டி முதலும் த்ரிக்‌ஷாக்‌ஷ்யாம்

சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா

சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா

சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2

சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி)

இந்தியளவில் சிறந்த படம்- வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாம்)

சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கம்)

சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம், இந்தி)

சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாஷ்யம், மலையாளம்)

சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்)

தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்

சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்)

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்)

சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை- ஏ.ஆர்- ரஹ்மான் (மாம்)

சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்

சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே)

சிறந்த பாடகர் – யேசுதாஸ்

சிறந்த பாடகி- சாஷா திரிபாதி, (’வான் வருவான்’ – காற்று வெளியிடை)

சிறந்த ஆடியோகிராஃபி – வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி

சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி

சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்)

சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான், வங்காளம்)

சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2

சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி)

சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2)

சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்‌ஷாஷ்யம், மலையாளம்

சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்.

admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?